ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

விஜய் ஆண்டனி நடிப்பில் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அவற்றில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‛‛ரத்தம்'' படமும் ஒன்று. மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, ஓஏகே சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கண்ணன் இசையமைக்கிறார்.
முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் "ரத்தம்" படத்தின் இந்திய படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றது. வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில் துவங்க உள்ளனர்.