படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சமந்தா கதாநாயகியாக நடித்து வரும் படம் யசோதா. இந்தப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயன் ஆகியோர் இயக்கி வரும் இந்தப் படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன், சம்பத் ராஜ் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க மணிசர்மா இசையமைக்கிறார், இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த யசோதா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மலை உச்சியில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரும்பும் நேரத்தில் படக்குழுவினருடன் இணைந்து ஒரு அதிரடி நடனமாடியிருக்கிறார் வரலட்சுமி. அதுகுறித்த ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது.