15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின் | ஹீரோவானார் பிக்பாஸ் விக்ரமன் | தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் சிராக் ஜானி | பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல் | பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு | விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? |

இந்தியத் திரையுலகில் இதுவரை எந்த ஒரு படமும் வசூல் செய்யாத அளவிற்கு முதல் நாள் வசூலில் 'கேஜிஎப் 2' சாதனை படைத்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்திய அளவில் பல இடங்களில் இப்படம் புதிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது. ஹிந்தியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 60 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள். மற்ற தென்னிந்திய மாநிலங்கள், உலகின் பிற பகுதிகள் என அனைத்தும் சேர்த்து சுமார் 150 கோடி வரை வசூலித்திருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் அதற்குள்ளாக இப்படம் 500 கோடி வசூலைப் பெற்றுவிடும் வாய்ப்பும் உள்ளது என்று சொல்கிறார்கள். ஒரு கன்னடப் படம் இந்தியத் திரையுலகில் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைப்பது மிகப் பெரும் விஷயம்.
ராஜமவுலியை மிஞ்சும் அளவிற்கு இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸை மிஞ்சும் அளவிற்கு யஷ் உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.