சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இந்தியத் திரையுலகத்தில் அடுத்தடுத்து இப்படி ஒரு சாதனை இதுவரை நிகழ்ந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளன. இதுவரையில் ஹிந்திப் படங்கள் கூட இந்த அளவிற்கு வசூலித்ததில்லை. ஆனால், ஒரு தெலுங்குப் படமும், ஒரு கன்னட படமும் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி ரூ.2000 கோடியை வசூலித்திருப்பது மாபெரும் சாதனை.
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் இதுவரையிலும் 1100 கோடி வசூலைக் கடந்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் 11 நாட்களிலேயே 900 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் சேர்த்து 2000 கோடி வசூலித்துள்ளது.
கொரானோவின் மூன்று அலை தாக்கத்திற்குப் பிறகுதான் இந்தப் படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களின் வெற்றி இந்திய சினிமாவையே புரட்டிப் போட்டுவிட்டது. வழக்கமான கமர்ஷியல் மசாலாப் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் இனி எப்படி படமெடுக்க வேண்டும் என்பதை இந்த இரண்டுப் படங்களும் கத்துக் கொடுத்திருக்கின்றன.