'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் வடிவேலு. முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். காமெடி கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. இதுதவிர மேலும் 3 படங்களில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரபுவோ - வடிவேலு சந்திப்பு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இவர்களின் முந்தைய படத்தின் கிளாஸிக் காமெடியான சிங் இன் த ரெயின் என்ற பாடலை அந்த வீடியோவில் வடிவேலு பாடியிருந்தார்.
இதுப்பற்றி வடிவேலு கேட்டபோது, ‛‛நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு பிரபுதேவா தான் நடனம் அமைக்கிறார். எனக்கு ஏற்றபடி இந்த பாட்டை ஸ்டைலாக வடிவமைக்கிறார் மாஸ்டர். செட்டில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. இந்த பாட்டு மக்களை மகிழ்விக்கும்'' என்றார்.