தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தென்னிந்திய சினிமாக்களில் இனிவரும் நாட்களில் பான் இந்திய திரைப்படம் என்கிற வார்த்தை தவிர்க்க முடியாத ஒன்றாக புழக்கத்திற்கு வந்து விட்டது. குறிப்பாக பாகுபலி படத்தை தொடர்ந்து, இந்த வார்த்தை அதிகம் பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான புஷ்பா, சமீபத்தில் வெளியான ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னடத்திலிருந்து வெளியாகியுள்ள கேஜிஎப் ஆகிய படங்கள் பான் இந்தியா ரிலீஸாக வெளியாவதால் ஏற்படும் லாபங்களை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மூலமாக தெலுங்கு தவிர்த்து மற்ற மொழி ரசிகர்களுக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நன்கு அறிமுகமாகி விட்டார். இதைத்தொடர்ந்து அவர் நடிக்க உள்ள அவரது முப்பதாவது படம் பான் இந்தியா படமாக உருவாகிறது என்பதை அந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா தற்போது தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக பான் இந்தியா படத்திற்கான கதை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஜனதா கேரேஜ் என்கிற வெற்றிப்படத்தை ஜூனியர் என்டிஆர் கொடுத்தவர்தான் இந்த கொரட்டாலா சிவா என்பது குறிப்பிடத்தக்கது.