திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு 4 தி பீப்பிள், செல்லமே படங்களில் நடித்த பரத்துக்கு பெரிய அங்கீகாரமும் வெற்றியும் கிடைத்தது ஷங்கர் தயாரித்து பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படம் தான்.
இந்த படத்திற்கு பிறகு பரத்துக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தது. இந்த நிலையில் தனது 50வது படத்தை தொட்டு விட்டார். 50 வது படத்திற்கு லவ் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். காதல் என்பதன் ஆங்கில சொல் தான் லவ். பரத்தின் திரை வாழ்க்கையை காதல் படம் துவக்கி வைத்தது. அடுத்த ரவுண்டை லவ் துவக்கி வைக்குமா என்பதை படம் வெளிவந்ததும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாலா இயக்குகிறார். பரத் ஜோடியாக வாணிபோஜன் நடிக்கிறார். விவேக் பிரசன்னா மற்றும் டேனியல் அன்னி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழில் நிமிர் படத்திற்கு இசையமைத்த ரோனி ரபேல் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மனநலம் பாதித்த தன் மனைவியை கணவன் எப்படி காதலுடன் கவனித்துக் கொள்கிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன். படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளியிட்டுள்ளார்.