முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் |

கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டாலே தங்களுக்கு பிடித்த நடிகர்களை தலைவரே..., வருங்கால முதல்வரே...., ஏழு கோடி தமிழர்களின் எதிர்காலமே... என்றெல்லாம் நீட்டி, முழக்கி போஸ்டர்களை ஒட்டுவது தமிழக சினிமா ரசிகர்களின் வழக்கம். இதைப் பார்த்து அந்த நடிர்களுக்கும் மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி பரவி முதல்வர் நாற்காலியும் கனவில் வந்து வந்து போகும். இந்த கனவில் அரசியல் ஆற்றில் குதித்து உடம்பை புண்ணாக்கிக்கொண்ட பலர் தமிழகத்தில் உண்டு. இப்போது இந்த பட்டியலில் புதிதாக சேரப்போகிறவர் நடிகர் கார்த்தி. அந்த புண்ணியத்தை பெறப்போவது மதுரை ரசிகர்கள்.
நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. பருத்திவீரன் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல படங்களில் நடித்தார். அவை பல வெற்றிப் படங்களாக அமைந்தது. சில படங்கள் தோல்வி அடைந்தது. என்றாலும் கார்த்தி தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார். அவ்வப்போது சமூக கருத்துக்களையும் கூறி வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில் வருகிற 25ம் தேதி அவருக்கு பிறந்தநாள் வருகிறது. இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மதுரையில் அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அந்த போஸ்டர்களில் எம்ஜிஆர் கருணாநிதி படங்கள் இடம் பெற்றுள்ளது. இருவருக்கும் நடுவில் கார்த்தியும், பின்னணியில் சட்டசபை வளாக கட்டடமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.
விஜயகாந்தையும், ரஜினிகாந்தையும், கமல்ஹாசனயும் அரசியலுக்கு வரச்சொல்லி உசுப்பேற்றிய அதே மதுரை ரசிகர்கள் தான் இப்போது கார்த்தியையும் உசுப்பேத்தி இருக்கிறார்கள்.