3 முதல்வர்கள் திறந்து வைத்த கே.பி.சுந்தராம்பாள் தியேட்டர் இடிப்பு | தனுசுடன் காதலா? : சிரிப்புதான் வருகிறது என்கிறார் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் | 'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் |
பிரபல மலையாள நடிகர் ஜெயராம். அங்கு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயராம் தமிழில் பஞ்சதந்திரம், தெனாலி, கோகுலம், துப்பாக்கி, உத்தம வில்லன், உள்பட பல படங்களில் நடித்துள்ளார் இவரது மனைவி பார்வதியும் மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர். இந்த தம்பதிகளுக்கு காளிதாஸ் என்ற மகனும், மாளவிகா என்ற மகளும் உள்ளனர்.
இதில் காளிதாஸ் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மாளவிகாவும் சினிமாவுக்கு வருகிறார். முறைப்படி நடனம், நடிப்பு கற்றுள்ள மாளவிகா தற்போது விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ," மாயம் செய்தாயோ பூவே" என்ற இசை ஆல்பத்தில் அசோக் செல்வன் உடன் நடித்தார். இந்த இசை ஆல்பத்தை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார், கிரிதரன் இசையமைத்துள்ளார்.
இந்த ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சினிமாவில் அறிமுகமாக தயாராகிவிட்டார் மாளவிகா. இதற்காக கதைகள் கேட்கத் தொடங்கி இருக்கிறார். அனேகமாக அவர் மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது.