ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் அதேசமயம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகராகவும் ஒரே சமயத்தில் அறிமுகமானவர் சசிகுமார். அடுத்ததாக ஈசன் என்கிற படத்தை இயக்கினார். முதல் பட அளவிற்கு அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதேசமயம் ஒரு நடிகராக அவருக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கவே நடிப்பு பக்கம் தனது கவனத்தைத் திருப்பி கடந்த பத்து வருடங்களில் பல படங்களில் நடித்துவிட்டார் சசிகுமார்.
ஆனால் சுந்தரபாண்டியன், நாடோடிகள் என மிகச் சில படங்களே அவருக்கு வெற்றி பட வரிசையில் அமைந்தன. கடந்த வருடத்தில் கூட அவர் நடித்த படங்கள்தான் அதிகம் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்ப உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் அவர் திரைப்படம் இயக்குவதற்கு பதிலாக வெப்சீரிஸ் தான் இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகனாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை நடிக்க வைக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.