மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
கமல்ஹாசன் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மகள்களும் திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் தாயாருமான சரிகா ஒரு நாளைக்கு 2000 - 2700 ரூபாய்க்கு நடித்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை சரிகாவை காதலித்து கடந்த 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கமல்ஹாசன். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் பிறந்தார்கள். இந்நிலையில் 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்த சரிகா, அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போதும் சில திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப்தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛தினமும் காலையில் எழுகிறோம், வேலை செய்கிறோம், தூங்குகிறோம். வாழ்க்கையை வீணடிப்பதாகவே நினைத்தேன். அதனால் ஒரு வருடம் ஓய்வு எடுத்துக் கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்க முடிவு செய்தேன். புதிதாக ஒன்றை செய்ய நினைத்தேன். திடீரென லாக்டவுன் வந்ததது. கையில் பணமில்லை. அந்த சமயத்தில் நாடகங்களில் நடித்து நாள் ஒன்றுக்கு ரூ.2000 முதல் ரூ.2700 வரை சம்பாதித்தேன். இது மிகவும் கவனத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. ஒரு வருடம் ஆகும் என்று நான் நினைத்தேன், ஆனால் அது ஐந்து வருடங்கள் ஆனது. அந்த ஐந்து வருடங்கள் நன்றாக இருந்தன'' என தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு வெப்சீரிஸில் சரிகா நடித்து வருகிறார். இது தவிர சில படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். கமலின் மகள்கள் திரைப்படத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் அவரது தாயார் 2000 ரூபாய்க்கு ஏன் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.