2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

தமிழ் சினிமா உலகில் இப்போதைய 'டான்' சிவகார்த்திகேயன் தான் என உதயநிதி ஸ்டாலின் சொல்ல, இல்லையில்லை, உதயநிதிதான் 'டான்' என சிவகார்த்திகேயன் மறுக்க நாளை(மே 13) யார் 'டான்' என்பது தெரிந்துவிடும். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் என 'டாக்டர்' படத்தின் ராசியான ஜோடி மீண்டும் சேர அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள படம்தான் 'டான்'. சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைப்பளார்.
கடந்த வருடம் வெளிவந்த படங்களில் 100 கோடி வசூலைப் பெற்று லாபத்தைக் கொடுத்த ஒரு படம் 'டாக்டர்'. அந்த வெற்றியை மீண்டும் 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் பெறுவார் என திரையுலகத்தில் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார் என்றும் சொல்கிறார்கள்.
கல்லூரிக் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன், ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் இப்படம் நாளை வெளியாகிறது. இப்படமும் வெற்றி பெற்றால் சிவகார்த்திகேயன் விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்திற்கு சென்றுவிடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.