ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் வெளியான ‛பிச்சைக்காரன்' சினிமாவில் ஒயின்ஷாப் காட்சியில் ‛டேய் எதுக்குடா பீர் அடிக்கற பசங்க எல்லாம் பாருக்கு வர்றீங்க. போற வழியில வூட்டாண்ட போர் தண்ணி குடிச்சுட்டு போக வேண்டியது தான...' என வசனம் பேசி ரசிகர்களின் பாராட்டை பெற்ற தேனி கோடாங்கிபட்டி யோகேஸ்வரன் 47. பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து பேசியதாவது...
முதல் வாய்ப்பு பற்றி
குடும்ப சூழ்நிலையில் கல்லூரி செல்லவில்லை. 1990ல் ஸ்டீல் பட்டறையில் வேலை செய்தபோது அங்கு பணிபுரிந்த மாஸ்டர் நிக்ஷன் ‛பிரேக் டான்ஸ்' கற்றுக் கொடுத்தார். சென்னை கோல்டன் கடற்கரையில் ‛வீக் எண்டு' நிகழ்ச்சியில் முதன்முதலில் மேடை ஏறி நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது.
யோகேஸ்வரன், ஈஸ்வர் சந்திரபாபு ஆனது எப்படி
சிறுவயதில் சென்னை வண்ணாரபேட்டைக்கு குடி பெயர்ந்தோம். ஊரடங்கிற்கு பின் மனைவி அமுதா, பிள்ளைகள் பாலாஜி, தனுஷ்காவுடன் கோடாங்கிபட்டியில் வசிக்கிறேன். நடன கலைஞராக திரைப்படங்களில் நடிப்பதற்காக யோகேஸ்வரன் என்ற பெயரை, ஈஸ்வர் சந்திரபாபு என மாற்றினேன்.
நடனக்குழுவில் வாய்ப்பு பெற்றது
1992ல் வண்ணாரப்பேட்டை கோயில் திருவிழாவில் நடிகர் சந்திரபாபுவின் தத்ரூப நடனம் ஆடினேன். வரவேற்பு கிடைத்தது. அதன்பின் ‛பிரி பேர்ட்ஸ்' நடனக்குழுவில் ராணிசீதா மன்றத்தில் ஆடினேன். அதில் இருந்து நாஞ்சில் மணிமாறனின் ‛புதியபூமி' நடனக்குழுவின் சார்பில், 3000 நடன மேடைகளில் சந்திரபாபுவின் நடனம் ஆடி ரசிகர்களின் ஆதரவை பெற்றேன்.
சினிமா வாய்ப்புகள் பற்றி
1993ல் இத்துறையில் நுழைந்தேன். அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‛நவாப்' படத்தில் நடித்தது முதல் வாய்ப்பு. பின், புது வசந்தம் தெலுங்கு ரீமேக் படம். தமிழில் வெளியான பிஸ்தா, உதவி இயக்குனர் செந்தில் மூலம் ‛குக்கூ' படத்தில் வாய்ப்பு, இயக்குனர் சசியின் மூலம் ‛பிச்சைக்காரன்' படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்த திரைப்பட வாய்ப்புகள்
‛குக்கூ' திரைப்படத்திற்கு பின் 20 படங்கள், கொரோனா ஊரடங்கிற்கு பின் 8 படங்களில் சோலோ டான்ஸ் ஆடி உள்ளேன். ‛டான்ஸ்' மாஸ்டர் தினேஷ் நடிக்கும் ‛கட்டிங்', வரலட்சுமி நடிக்கும் ‛அரசி' படம் விரைவில் வெளியாக உள்ளன. ‛தரை டிக்கெட்டு' உட்பட 6 படங்களில் நடித்து வருகிறேன்.
சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து
சந்திரபாபுவின் சொந்த ஊரான தூத்துக்குடியை சேர்ந்த ஜான் இப்படத்தை தயாரிக்கிறார். அதில் சந்திரபாபுவாக நடிக்க என்னை தயார்படுத்தி வருகிறேன்.