அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக்: தமிழில் மட்டும் தோல்வி அடைந்த பாண்டவர்கள் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள் | கைதி 2 படத்தில் இடம்பெறும் விக்ரம் படத்தின் 3 எல்சியு கேரக்டர்கள் | அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி | கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து |
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து நடிகர் விஜய் சென்னைக்கு திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.