பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் |
தமிழில் உள்ள பிரபல இயக்குனர்களும் பிரபல ஹீரோக்களும் தெலுங்கிலும் தங்களது முத்திரையை பதிக்க களம் இறங்கி விட்டனர். ஒரு பக்கம் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட, இந்தப் பக்கம் இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். கதாநாயகனாக ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ராம்சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இதுவரை வெளியான ராம்சரணின் லுக்கும் அதை உறுதிப்படுத்துவது போல அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு அதிகாரி என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. தமிழில் 25 வருடங்களுக்கு முன்பு நடிகர் அருண்பாண்டியன் நடிப்பில் அதிகாரி என்கிற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.