பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் |
கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களில் நடித்த சிம்பு, மாநாடு வெற்றிக்குப்பிறகு தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயடு லோஹர் என்பவர் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் இப்படத்திலிருந்து காலத்துக்கும் நீ வேணும் என்ற லிரிக் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அந்த பாடல் ஒரு கோடி பார்வைகளை பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்பாடலை தாமரை எழுதியிருக்கிறார்.