திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
செல்பி என்ற படத்தில் இணைந்து நடித்த ஜிவி. பிரகாஷ், இயக்குனர் கவுதம் மேனன் ஆகிய இருவரும் தற்போது 13 என்ற ஒரு ஹாரர் படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். கே. விவேக் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகை ஆத்யா பிரசாத் நாயகியாக நடிக்கிறார். மெட்ராஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டார்லிங் என்ற ஹாரர் படம் ஜிவி பிரகாஷிற்கு வெற்றி படமாக அமைந்தது. அதே பாணியில் இந்தப்படமும் உருவாகி இருக்கிறது. இயக்குனர் கவுதம்மேனனும் இப்படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.
ஜிவி .பிரகாஷ் கூறுகையில், எனது முதல் படமான டார்லிங் ஹாரர் கதையில் உருவானது. அந்த படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். என்றாலும் அதன் பிறகு வாரம் ஒரு ஹாரர் திரைப்படம் வெளியாகி வந்ததால் அந்த கதைகளில் நடிப்பதில் நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இந்த 13 படத்தின் கதையை கேட்ட பிறகு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்த அளவு கதையில் சுவராஸ்யம் இருந்தது. இப்படமும் டார்லிங் படத்தை போன்று மிகப்பெரிய வெற்றி பெறும் என்கிறார் ஜிவி பிரகாஷ்.