தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சினிமாவில் எப்போதும் பாசப் போராட்டத்துக்கு பஞ்சமில்லை. திரையிலும், நிஜத்திலும் அடிக்கடி நடக்கும் விஷயம். ஏ.ஆர்.ரகுமான் தற்போது அதிகமான படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதுதவிர ஜூலை 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை உலக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். உலக நாடு முழுக்க தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, துபாய் எக்ஸ்போ, கேன்ஸ் பட விழா, பார்த்திபன் படம் என பம்பரமாக சுற்றி வருகிறார்.
இதனால் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகையும் அவர் குழுவில் பாடி வருபவருமான பாடகி ஸ்வேதா மோகன், 'தயவு செய்து உங்கள் உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான நேரத்திற்கு தூங்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஏ.ஆர்.ரகுமான் 'கண்டிப்பாக முயற்சி செய்கிறேன், என் மீது அக்கறை காட்டியதற்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.