மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். இதனை தற்போது மணிரத்னம் அதே பெயரில் திரைப்படமாக இயக்கி வருகிறார். இது இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சோழ மன்னர்களின் கதை என்பதால் சோழ மண்ணான தஞ்சாவூரில் படத்தின் டீசரை அடுத்த மாதம் வெளியிட்டு புரமோசன் பணிகளை தொடங்க இருக்கிறார் மணிரத்னம். தஞ்சாவூரில் பொதுமக்கள் முன்னிலையில் பிரமாண்ட விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழாவிற்கு பிறகு படக்குழுவினர் உலக நாடுகள் முழுக்க படத்தின் புரமோசனுக்காக செல்ல இருக்கிறார்கள்.