துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவில் மிக அதிக பொருட்செலவில் எடுக்காத ஒரு படம், அதிக வசூலைப் பெற்று, அதிக லாபத்தைக் கொடுக்கப் போகிறது. அந்தப் படம் 'விக்ரம்'. இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த '2.0' படம்தான் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 600 கோடி ரூபாய் வசூலித்த படம். அவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்டும் லாபத்தைக் கொடுக்காத படமாக அமைந்தது '2.0'. அப்படம்தான் தமிழில் இதுவரையிலும் அதிக வசூலைக் குவித்துள்ள படமாக இருக்கிறது.
இப்போது 'விக்ரம்' படம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் படமாக இடம் பிடிக்க உள்ளது. அதே சமயம் முதலிடத்தில் உள்ள படத்தைக் காட்டிலும் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்ற சாதனையை நிகழ்த்த உள்ளது. இப்படம் தற்போது தமிழகத்தில் 110 கோடி, கேரளாவில் 25 கோடி, தெலங்கானா, ஆந்திராவில் 22 கோடி, கர்நாடகாவில் 17 கோடி, வெளிநாடுகளில் 90 கோடி, வட இந்தியாவில் 6 கோடி என மொத்தமாக 270 கோடி வசூலைக் கடந்துள்ளது.
வார இறுதி நாட்களான நேற்றும், இன்றும் இப்படம் பெரும்பாலும் ஹவுஸ்புல்லாகவே இருக்கிறது. அதனால், அடுத்த சில நாட்களில் இப்படம் 300 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த படம் ஒன்று இந்த அளவிற்கு வசூலைக் குவித்து புதிய சாதனையைப் படைப்பது தமிழ்த் திரையுலகினரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.