ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

அட்டு படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இயக்கும் புதிய படம் லாக். இது சைக்கோ த்ரில்லர் படம். பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் போனோபென் குழுமம், சக்திவேல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் மதுஸ்ரீ, பிரியங்கா, புவனா, ஹரிணி ஆகிய 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர மதன், மணி ஸ்ரீனிவாச வரதன் , பாரதி , மற்றும் பலர் நடித்துள்ளனர். நந்தா ஒளிப்பதிவு செய்துள்ளார், விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார்.
படம் பற்றி ரத்தன் லிங்கா கூறியதாவது: இது இன்றைய காலத்துப் பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. படத்தில் நல்ல செய்தி ஒன்றும் சொல்லப்பட்டுள்ளது. 'இந்த உலகத்தில் உன்னைக் காப்பாற்ற யாராலும் முடியாது. நீயே தான் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் ' என்கிற கருத்து அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருந்து தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புரிய வைக்கும்.
இதற்கு எந்தவிதமான நட்சத்திர பலமும் தேவையில்லை என்பதால் புதுமுகங்களை வைத்து உருவாக்கி இருக்கிறோம். ஏனென்றால் இந்தக் கதைக்குப் புதுமுகங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும். அப்படி முதன் முதலில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் தான் மதுஸ்ரீ அதன் பிறகு பலர் வந்து சேர்ந்தார்கள். என்றார்.