தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் மணி ஹீஸ்ட். இதற்கு அடுத்த இடத்தை பிடித்த தொடர் ஸ்குயிட் கேம். மணி ஹீஸ்ட் முடிந்து விட்டது. தற்போது ஸ்குயிட் கேமின் இரண்டாம் சீசன் வெளிவர இருப்பதை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தென்கொரிய தொடரான ஸ்குயிட் கேம் உலக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. குலைநடுக்க வைக்கும் காட்சிகளுடன் திக் திக் தொடராக இது இருந்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெப் சீரிஸ்களை பின்னுக்கு தள்ளியது இந்த கொரிய தொடர். தொடரின் இயக்குனர் வாங்டாங் யங் கூறியிருப்பதாவது: ஸ்குயிட் கேம் முதல் சீசனை உருவாக்க 12 வருடங்கள் ஆனது. ஆனால் 12 நாளில் உலகின் பிரபலமான தொடராக மாறியது. இப்போது சீசன் 2 அதே தரத்தோடும், வேகத்தோடும் வருகிறது. என்று கூறியிருக்கிறார்.