23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
பா.ரஞ்சித்தின் கடைசியாக இயக்கிய 'சார்பட்டா' திரைப்படம் வரவேற்பை பெற்றது . தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை குறுகிய காலத்தில் இயக்கியுள்ளார் . இதில் அசோக் செல்வன் , காளிதாஸ் ஜெயராம் , துஷாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் ரஞ்சித். 'பாடி பில்டிங்கை மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'மைதானம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் பிரம்மாண்டமாக 3டி வெர்ஷனில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.