ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி வெளியான படம் 'விக்ரம்'. படம் வெளியான 25 நாட்களில் ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
150 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் உருவான இப்படம் 400 கோடி ரூபாய் வசூலித்து ஏறக்குறைய 250 கோடி வரையில் லாபத்தைக் கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் 600 கோடி செலவில் தயாராகி 800 கோடி வசூலித்ததுதான் தமிழ் சினிமாவின் அதிக வசூல் சாதனையாக இருந்து வருகிறது.
ஆனால், லாபம் என்ற வகையில் '2.0' படத்தை விடவும் 'விக்ரம்' படம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என நம்பர் 1 இடத்தை ஏற்கெனவே 'விக்ரம்' பிடித்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.
கமல்ஹாசனின் 'விக்ரம்' பட வசூல் சாதனையால் அவருக்கான மார்க்கெட் மதிப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. அவர் நடித்து வரும் 'இந்தியன் 2' படம் சர்ச்சைகளைக் களைந்து படமாக்கப்பட்டு முடிந்தால் இதை விடவும் வசூல் சாதனை படைக்கும் என்கிறார்கள்.
கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த 'சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கிறான்' படங்களை தூசித் தட்டி மீண்டும் எடுத்தால் கூட அப்படம் வியாபாரம் ஆகிவிடும் என்பதுதான் உண்மை.