தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு ஜுலை மாதம் முதல் ஆரம்பமாகும் என முதலில் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது படப்பிடிப்பை மேலும் சில மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது. முதல் பாகத்தை 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தார்கள். இரண்டாம் பாகத்தை 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்களாம். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் வசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.
இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையிலான மோதல் அதிகமாக இருக்கும்படி முதலில் திட்டமிட்டிருந்தார்களாம். இப்போது ஹிந்தி நடிகர் ஒருவரையும் கூடுதலாகச் சேர்க்கலாமா என யோசிக்கிறாராம் இயக்குனர். முதல் பாகத்திற்கு ஹிந்தியில் நல்ல வசூல் கிடைத்தது. இரண்டாம் பாகத்தில் அதை விட பன்மடங்கு வேண்டுமென்றால் ஹிந்தி நடிகரும் வேண்டும் என்று பாலிவுட்டில் சொல்கிறார்களாம்.
எனவே, கதையில் சில மாற்றங்களைச் செய்து எழுதி வருகிறாராம் இயக்குனர் சுகுமார். அது திருப்திகரமாக வந்த பிறகே படப்பிடிப்பு ஆரம்பம் என்கிறார்கள். எனவே, படம் 2024ல் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது டோலிவுட் வட்டாரம்.