துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் தேசிய விருது பெற்றதன் மூலம் புகழ்பெற்றார். ஒட்டிப்பிறந்த பெண்களாக சாருலதா என்ற படத்தில் நடித்து மேலும் புகழ்பெற்றார். தற்போது ஹிந்தி வெப் தொடர்கள் மூலம் பான் இந்தியா நடிகையாகிவிட்டார்.
இந்த நிலையில் மும்பை நடிகைகளால் தென்னிந்திய நடிகைகள் குறிப்பாக தமிழ் நடிகைகள் சில நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறியிருக்கிறார். ஒரு நேர்காணலில் இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ் சினிமாவில் முந்தைய காலகட்டங்களில் நடிகைகளின் தோற்றம் பற்றிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. அவர்களின் நடிப்பு மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை நடிகைகளின் வருகைக்கு பிறகு நாயகிகள் வெள்ளையாக இருக்க வேண்டும் ஒல்லியாக உடல்கட்டுகோப்புடன் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது.
மும்பை நடிகைகள் ஒல்லியா உடல்கட்டுக்கோப்புடன் இருப்பதும், வெள்ளையா இருப்பதும் இயல்பிலேயே அவர்களுக்கு வாய்த்தது. ஆனால் இங்கு அப்படி இல்லை. இதனை புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள். இதனால் தமிழ் நடிகைகள் நெருக்கடியை சந்தித்து வந்தார்கள். கவர்ச்சியாக நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போது வடக்கிலும் நமது நிறத்தை விரும்புகிறார்கள். நமது திறமையை மதிக்கிறார்கள். பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கூட நமது எல்லை விரிவடைந்திருக்கிறது. இவ்வாறு பிரியாமணி கூறியயுள்ளார்.