தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் நடக்கும் பெரும்பாலான இசை வெளியீடுகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் ஆகியவற்றில் முன்னணி நடிகைகள் கலந்து கொள்ளவே மாட்டார்கள். அவர்களைப் பற்றி பல முறை பல தயாரிப்பாளர்கள், விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் கண்டித்தாலும் அதை அவர்கள் கண்டு கொள்வதும் இல்லை.
நேற்று ஐதராபாத்தில் நடந்த 'மாடர்ன் லவ் ஐதராபாத்' இணையத் தொடர் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்து கலந்து கொண்டிருக்கிறார். வீட்டு படியில் ஸ்லிப் ஆகி விழுந்து காலில் அடிபட்டுள்ளதாக பேசும் போது அவர் தெரிவித்தார். வீல் சேரில் வந்து கையில் ஊன்று கோலுடன் மேடைக்கு ஏறி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இணையத் தொடருக்காக நித்யா மேனன் அப்படி வந்து கலந்து கொண்டது அத்தொடரின் குழுவினர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். இப்படியும் நடிகைகள் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், தமிழில் விழா என்றால் வரவே மாட்டேன் என அடம் பிடிக்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.