சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
முன்பெல்லாம் ஒரு படம் 100 நாள் ஓடினால் விழா கொண்டாடுவார்கள். இப்போதெல்லாம் வெள்ளிக்கிழமை வெளியான படம் திங்கட் கிழமை வரை தியேட்டரில் இருந்து விட்டாலே சக்சஸ் மீட் என்ற பெயரில் வெற்றி விழா கொண்டாடி விடுகிறார்கள். இப்போது இதையும் தாண்டி படம் வெளிவருதற்கு முன்பே வெற்றி விழா கொண்டாட தொடங்கியிருக்கிறார்கள்.
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் சுருளிவேல் தயாரிப்பில் செல்வ அன்பரசன் இயக்கி உள்ள படம் பேய காணோம். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, செல்வகுமார் மற்றும் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் வெளியீட்டு தேதியே இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பாக வெற்றி விழா கொண்டாடிவிட்டார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் செல்வ அன்பரசன் விழாவில் பேசியதாவது : என்னிடம் நிறைய அருமையான கதைகள் இருந்தது ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்தேன். கடவுள் ஆசிர்வாதமாக தயாரிப்பாளர் சுருளிவேல் வாய்ப்பு தந்தார். முழு சுதந்திரம் தந்தார். நான் செய்த மிகப்பெரிய தவறும் மிகப்பெரிய சரியும் நடிகை மீரா மிதுனை நாயகி ஆக்கியது தான்.
பேயாக காட்ட மீரா மிதுன் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன் ஆனால் அவருக்கும் எனக்கும் முதல் நாளே சண்டை. அதன் பிறகு தயாரிப்பாளரிடம் சமாதானம் பேசி ஒழுங்காக ஷூட்டிங் வந்தார். நன்றாகவும் நடித்து கொடுத்தார். அதன் பிறகு ஜெயிலுக்கு போய் விட்டார். அவர் வெளியே வந்த பிறகு எப்படியோ படத்தை எடுத்து முடித்து விட்டோம். மற்ற நடிகர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.
இந்தப்படம் பல தடைகளை சந்தித்தது ஆனாலும் எங்களை சுற்றி சில நல்ல உள்ளங்கள் இருந்ததால் எங்களால் படத்தை முடிக்க முடிந்தது. பிரச்சினைகளை தாண்டி இந்த படத்தை முடித்ததே பெரிய சக்சஸ். அதனால் தான் இந்த வெற்றி விழாவை வைத்தோம்.
இவ்வாறு அவர் பேசினார்.