பிளாஷ்பேக் : நம்பியாரை நாயகன் ஆக்கிய 'கல்யாணி' | மலைவாழ் மக்களின் கல்வியை வலியுறுத்தும் 'நறுவீ' | பிரபல டிசைனர் குமார் காலமானார் | ‛கூலி, வார் 2' ஜெயிப்பது யார்? | கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு உதயநிதி, இபிஎஸ், பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? |
தனுஷ் சினிமாவில் அறிமுகமான படம் ‛துள்ளுவதோ இளமை'. இந்த படத்திற்கு தனுஷின் அண்ணன் செல்வராகவன் திரைக்கதை எழுத, அப்பா கஸ்தூரிராஜா இயக்கினார். ஷெரின், அபிநய், ஷில்பா உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார்.
2002ம் ஆண்டு வெளியான இந்த படம் 20 வருடங்களுக்கு பிறகு நாளை (ஜூலை 8) டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் தியேட்டரில் வெளியாகிறது. குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. சென்னையில் பிவிஆர், ஈவிபி, மாயாஜால் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரைகள் உள்பட 25 தியேட்டர்களில் வெளியாகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் வெளியாகிறது.