தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'விக்ரம்'. கடந்த மாதம் வெளிவந்த இந்தப் படம் ஆறாவது வாரத்தில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது.
ஓடிடியில் படம் வெளிவந்த பிறகு அதை நிறுத்தி நிதானமாகப் பார்க்கும் வசதி உள்ளது. 'விக்ரம்' படத்தில் திரைக்கதையில் பல நுணுக்கங்கள் இருக்கும். 'டீடெய்லிங்' அதைவிட இன்னும் அதிகமாக இருக்கும். படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார் லோகேஷ் கனகராஜ். இப்படி ஒரு தரமான படத்தில் கமல்ஹாசன் நடித்து பெரிய வரவேற்பையும், 400 கோடிக்கும் அதிகமான வசூலையும் கொடுத்தது ரஜினி ரசிகர்களை நிறையவே வெறுப்பேற்றி இருக்கிறது போலிருக்கிறது.
ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஓடிடியில் படத்தைப் பார்த்த பிறகு குறை கண்டுபிடிக்கிறோம் என தப்புத் தப்பாக குறை இல்லாததைக் கூட குறையாகச் சொல்லி கமல் ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். படத்தை ஒழுங்காக புரிந்து கொண்டு பாருங்கள் ரஜினி ரசிகர்களே என்பதை ஒரு சில கெட்ட வார்த்தைகளுடன் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் அடுத்த படம் 'விக்ரம்' படம் போல ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் பேராவலாக தற்போது உள்ளது.