மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தற்போது ராம்சரனின் 15வது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். கியாரா அத்வானி, அஞ்சலி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். வழக்கம்போல் இந்த படத்தையும் பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது ராம்சரண் படத்தை அடுத்து இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கும் ஷங்கர், அந்த படத்தை முடித்ததும் தனது கனவு படத்தை சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் தண்ணீருக்கு அடியில் அறிவியல் கலந்த ஒரு கதையில் உருவாகிறது. மேலும் சர்வதேச தரத்தில் உருவாகும் அந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.