பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, முன்னணி நாயகியாக திகழ்ந்தார். சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்து 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் விஜய்யின் தெறி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக வித்யாசாகர் காலமானார். இதனிடையே நேற்று ஜூலை 12ம் தேதி மீனா மற்றும் வித்யாசாகரின் 13வது திருமண நாளாகும். இந்த நிலையில் மீனா கடந்த ஆண்டு போட்ட ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ‛‛நீ என் வாழ்வில் வானவில் போல வந்து என் வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக்கினாய். சேர்ந்து இருப்பதுதான் அற்புதமானது. எனக்கு பிடித்த இடம் அதுதான். நீ கொடுத்த புன்னகையை எப்போதும் அணிந்திருப்பேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்'' என மீனா பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.