ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

தமிழில் அவ்வப்போது கதாநாயகனாக நடிப்பவர் சித்தார்த். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் 'அருவம்'. 2019ல் வெளிவந்த அந்தப் படம் பெரிதாக ஓடவில்லை. அதன் பிறகு அவர் தெலுங்கில் நடித்த 'மஹா சமுத்திரம்' படம் கடந்த வருடம் வெளியானது. ஆனால், படம் படுதோல்வி அடைந்தது. இருப்பினும் அந்தப் படத்தில் தன்னுடன் நடித்த அதிதி ராவ் ஹைதரி உடன் அவர் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது.
படம் தோல்வி அடைந்தாலும் சித்தார்த், அதிதி இடையே காதல் உருவாகி இருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் மும்பையில் சித்தார்த், அதிதி இருவரையும் புகைப்படக் கலைஞர்கள் ஒன்றாக படம் பிடித்தனர். அப்போது புகைப்படக்காரர்களிடம் சித்தார்த் சண்டை போட்டிருக்கிறார். அடுத்த முறை கனிவாக பேச மாட்டேன் என மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை பாலிவுட் மீடியாக்கள் வெளியிட்டுள்ளன.
சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நடிகைகள் சமந்தா, ஸ்ருதிஹாசன், சோஹா அலிகான் ஆகியோரைக் காதலித்தார் என இதற்கு முன்பும் கிசுகிசுவில் சிக்கியவர். அதிதி ராவ் ஹைதரி தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து கொண்டு ஐந்து வருடங்களுக்குப் பிறகு விவகாரத்து செய்தவர். அவர் திருமணமாகி விவாகரத்து பெற்றது பலருக்குத் தெரியாது.
இருவரது காதலும் கல்யாணத்தில் முடியுமா அல்லது சித்தார்த்தின் முந்தைய காதல் போல கிசுகிசுவுடன் நிற்குமா என திரையுலகத்திலேயே கேள்வி எழுப்புகிறார்கள்.