அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
ஜவுளிக்கடை அதிபர் அருள் சரவணன் தயாரித்து நடிக்கும் படம் தி லெஜண்ட். ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ளது. உலகம் முழுக்க 2500 தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் சுமார் 60 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளதாகவும், வெளியீட்டு செலவு மட்டும் 10 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அருள் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டாலா நடித்துள்ளார்.
இவர்களுடன் மறைந்த காமெடி நடிகர் விவேக், கீதிகா திவாரி, விஜயகுமார், பிரபு, சுமன், நாசர், லிவிங்ஸ்டன், யோகி பாபு, ரோபோ சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் இசை அமைத்துள்ளார். விவசாய வளர்ச்சிக்காக ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிக்கு ஏற்படும் பிரச்சினைகளும், அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும் தான் படத்தின் கதை.