தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். டி.ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்று அப்பாவின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று நலமான டி.ராஜேந்தர் அமெரிக்காவில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். முழுமையாக குணமாகி இன்று அதிகாலை சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர். அவருக்கு லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் : ‛‛தமிழ்நாட்டு மக்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனையின் பலனால் நலமாகி உள்ளேன். இன்றைக்கு அதே பழைய தெம்போடு, உணர்வோடு தாய் மண்ணிற்கு வந்துள்ளேன். அமெரிக்காவில் சிகிச்சை பெற வேண்டும் என என் மகன் சிம்பு வலியுறுத்தியபோது என் தாய் மண்ணான தமிழ்நாட்டிலேயே சிகிச்சை பெறலாம் என்று சொன்னேன். ஆனால் சிம்பு அங்கு தான் போக வேண்டும் என்றார். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கூற்றுக்கு ஏற்ப அமெரிக்காவில் உயர் சிகிச்சைக்கு சென்றேன்.