மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஹன்சிகா நடிப்பில் ஜமீல் இயக்கி உள்ள படம் மஹா. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். இப்படத்தில் அவருடன் ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு மற்றும் ரேஷ்மா, சனம்ஷெட்டி, மேகா ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படம் பல தடைகளை தாண்டி இன்று(ஜூலை 22) வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ஹன்சிகா வெளியிட்ட அறிக்கை : என்னுடைய ரசிகர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்தான். ரசிகர்களின் அமோகமான ஆதரவினால் 50 படங்களில் நடித்து விட்டேன். இந்த மஹா படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்து. மேலும், ஒரு நடிகை 50 படங்களில் நடிப்பது எளிதான காரியம் அல்ல . அளவற்ற அன்பு கொண்ட ரசிகர்களை பெற்ற ஒரு நடிகையால்தான் இந்த அளவுக்கு சினிமாவில் சாதிக்க முடியும். இதுவரை எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இந்த மஹா படத்தில் எனக்கு ஆதரவாக இருந்த நண்பர் சிம்புவுக்கும், சக நடிகர்களுக்கும் எனது ஐம்பதாவது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.