துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பல விருதுகளும் அங்கீகாரமும் பெற்றது. சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு கூட இந்தப் படம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 2020-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரை நடிகர் தனுஷ் வாழ்த்தி உள்ளார்.
தனுஷ் கூறுகையில், ‛‛தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா சார் மற்றும் நண்பர் ஜி.வி.பிரகாஷிற்கு ஆகியோருக்கு... தமிழ் சினிமாவிற்கு இன்று பெரிய நாள். பெருமையாக உள்ளது'' என்றார்.