போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் என்கிற படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினி நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ராம் இயக்கிய தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படமும் வசந்த் ரவியின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இதைத்தொடர்ந்தே ஜெயிலர் படத்தில் அவர் இடம்பெற்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது.