தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‛விருமன்' படம் ஆக., 12ல் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாய் நடந்தது. அப்போது அங்கு பேசிய இந்த படத்தில் நடித்த சூரி, ,‛‛ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட, ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது'' என்றார். இது சர்ச்சையானது.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த இந்தப்பட பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, ‛‛மதுரை விழாவில், ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட, ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது என்று பாரதியாரின் கூற்றைத் தான் கூறினேன். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவும் கூறிவில்லை. மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் என்றார்.