பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

ஒரு காலத்தில் பாலிவுட் படங்கள் மட்டுமே பல நூறு கோடிகளை வசூலித்து முதலிடத்தை பெற்று வந்தன. இந்தநிலையில் சமீபகாலமாக ஹிந்தியில் வெளியாகி வரும் படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவி வருகின்றன. குறிப்பாக நடிகர் அக்ஷய் குமார் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகின்றன. அதேசமயம் தென்னிந்தியாவில் தயாராகி ஹிந்தியில் வெளியான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் ஆகிய படங்கள் அங்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதித்து காட்டின.
இதனால் பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ரசிகர்களின் மனநிலை வேறுவிதமாக மாறி உள்ளதோ என்பது பற்றி ஆராயாமல் வழக்கமான பாணியிலேயே படங்களை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்தநிலையில் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் ஹிந்தி படங்களின் தோல்விகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக காரணம் ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மக்களிடம் தற்போது பாக்கெட்டில் பணம் இல்லை.. ஒரு படத்தை பார்ப்பதற்கு செலவு செய்ய வேண்டுமென்றால் அந்த படத்தை பற்றி நன்கு உறுதி செய்து கொண்ட பின்னரே தியேட்டருக்கு செல்ல விரும்புகிறார்கள்.. அப்படி இல்லை என்றால் கேஜிஎப், பாகுபலி போன்ற எதிர்பார்ப்பு கொண்ட இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமே செல்ல விரும்புகிறார்கள்.. இப்போது அவர்கள் சினிமா, கிரிக்கெட் ஆகியவற்றை மறந்து விட்டு நாட்டில் நிலவும் பொருளாதார பற்றாக்குறை குறித்து தான் பேசி வருகிறார்கள்” என்று அறிவார்ந்த விதமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.