துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
காமெடி நடிகரான சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். கடந்தவாரம் கார்த்தி நடித்து வெளியாகியுள்ள விருமன் படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ஆயிரம் கோவில் கட்டுவதை விட, அன்னச்சத்திரம் கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவதே சிறந்தது என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் மத்தியில் இருந்து கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. இதன் பிறகு நான் இந்து கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. மதுரை மீனாட்சி அம்மனின் பெரிய பக்தன். எந்த வேலையை செய்தாலும் கடவுளை வணங்கி விட்டு தான் ஆரம்பிப்பேன் என்று சொல்லி அதை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூரி. அதையடுத்து சுதந்திர தின விழாவின்போது மாப்பு குச்சியில் தேசிய கொடியை ஏற்றி விமர்சனங்களுக்கு உள்ளானார் சூரி. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூரி. அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.