இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற தெலுங்குப் படம் 'புஷ்பா'. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி இங்கு 25 கோடிக்கும் மேல் வசூலித்து லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது.
இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக சிறப்பாக உருவாக்க வேண்டும் என கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக திரைக்கதையை எழுதி வந்தனர். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று(ஆக., 22) இப்படத்தின் பூஜை நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அமெரிக்காவில் இருப்பதாலும், கதாநாயகி ராஷ்மிகா வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையிலான மோதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'இரண்டாம் பாகத்திற்கு 'புஷ்பா - த ரூல்' என பெயர் வைத்துள்ளார்கள்.