தனுசுடன் காதலா? : சிரிப்புதான் வருகிறது என்கிறார் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் | 'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு |
காதல் செய்த சமயங்களில் சுற்றுலா சென்ற புகைப்படங்களைப் பதிவிட்டு பல இளைஞர்களை ஏங்க வைத்தது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. சரி, திருமணமான பின்பாவது அப்படி புகைப்படங்களைப் பதிவிடாமல் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் இப்போதும் தொடர்கிறார்கள். தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இடைவிடாமல் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இயக்குனரும், சில காதல் பாடல்களை எழுதியவருமான விக்னேஷ் சிவனின் நயன்தாரா பற்றிய கவிதை வரிகள் இப்போதும் தொடர்வதில் ஆச்சரியமில்லை தான். ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பழமையான வாலேன்சியா நகரில் தற்காலக் கட்டிடங்கள் முன்பாக நயன்தாரா எடுத்த சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அவற்றோடு, “நீ என் உலக அழகியே, உன்னைப் போல் ஒருத்தி இல்லையே… என் உலக அழகியும், இவ்வுலகின் அழகும், இந்தியாவிலிருந்து வந்துள்ள அழகானப் பெண் நயன்தாரா..இதுவரை சென்ற இடங்களில் மிகச் சிறந்த இடம்,” எனப் பதிவிட்டுள்ளார்.