மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' |
கமல் நடித்து பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2ம் பாகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக தாமதமான இந்த படத்தின் பணிகள் இப்போது சுறுசுறுப்பாக தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் உதயநிதி. இந்த படத்தின் தயாரிப்பு பணியில் இப்போது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. இதனால் படப்பிடிப்பும் தொடங்கி உள்ளது.
சித்தார்த், காஜல் அகர்வால், சுகன்யா, ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, டெல்லி கணேஷ் உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விவேக் மரணம் அடைந்து விட்டதால் அவர் கேரக்டர் மட்டும் குருசோம சுந்தரமாக மாற்றப்பட்டுள்ளது.
தற்போது கமல்ஹாசன் தனது காதி நிறுவனத்தின் புரமோசன் பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அதனுடன் இந்தியன் 2வுக்காக சேனாதிபதி தாத்தாவின் தோற்றத்திற்காகவும் பல ஆலோசனைகளையும் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கமல்ஹாசனோ, உதயநிதியோ முக்கிய நடிகர்களோ இல்லாமல் படத்தின் இரண்டாவது பூஜை நேற்று சென்னையில் நடந்தது. இதில் ஷங்கர் கலந்து கொண்டார். தற்போது கமல் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகிறது. கமல் வந்ததும் அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகிறது. படத்தை 2023 பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரும் இலக்கில் பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.