5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
தமிழ் சினிமாவின் அபூர்வமான நடிகைகளில் ஒருவர் அதிதி பாலன். அடிப்படையில் வழக்கறிஞரான இவர் அருவி படத்தின் மூலம் நடிகை ஆனார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன்பிறகு பிசியான நடிகை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை. தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார். அதன்பிறகு அவர் கோல்ட் கேஸ் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் அவர் நடித்தார். இப்போது படவேட்டு என்ற தமிழ் படத்திலும், சமந்தா நடிக்கும் தெலுங்கு படமான சாகுந்தலம் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அதிதி பாலன் திடீரென மண்பாண்ட கலைஞர் ஆகியிருக்கிறார். மண்பாண்டம் செய்வது போன்ற படத்தை வெளியிட்டுள்ள அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: மண்பாண்டம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும், அதை முறைப்படி கற்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதன் முதல் அடியை இப்போது எடுத்து வைத்திருக்கிறேன். மண்பாண்ட கலைஞர் ரஞ்சிதா எனக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
மண்பாண்டம் செய்வது வெறும் கலையோ, தொழிலோ அல்ல. அது மனம் சம்பந்தப்பட்டது. அதில் களிமண் மட்டுமல்ல மனதும் இருக்கிறது. ஆழ்ந்த மனநிலையும், விழிப்புணர்வும் கொண்டவர்களால் மட்டுமே மண்பாண்ட கலை செய்ய முடியும். உடலுக்கும், மனசுக்கும் உற்சாகம் தரும் கலை மண்பாண்ட கலை. என்று தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.