பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
அருவி என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். தற்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் படவேட்டு என்கிற படம் தான், முதலில் அவர் ஒப்பந்தமாகி நடித்து வந்தாலும், அதற்கு அடுத்ததாக, பிரித்விராஜ் உடன் இணைந்து நடிக்கும் கோல்ட் கேஸ் பட வாய்ப்பை பெற்று, அந்த படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தநிலையில் படவேட்டு படத்தை முந்திக் கொண்டு கோல்ட் கேஸ் படம் இன்று (ஜூன் 30) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அதிதி பாலன் கூறும்போது, "படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முதல் நாள் வரை பிரித்விராஜை நேரில் சந்தித்தது கிடையாது. அவர் பெர்பெக்ட் ஆன நடிகர் என்பதால், அவருடன் இணைந்து நடிக்கும் போது சரியாக நடிக்க வேண்டுமே என்கிற பதட்டம் கொஞ்சம் இருந்தது. ஆனால் இரண்டாவது நாளிலிருந்து எனது டென்ஷனை போக்கிய பிரித்விராஜ், நடிப்பில் சில நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக அவர் ஒரு இயக்குனரும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும், இயக்குனர் கண்ணோட்டத்துடன் எப்படி அணுகுகிறார் என்பதையும் என்னால் கவனிக்க முடிந்தது. இந்த படம் ஒரு மரணம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவரும், பத்திரிக்கை நிருபர் ஒருவரும், இரண்டு பாதைகளில் நடத்தும் விசாரணையாக உருவாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக பிரித்விராஜும், பத்திரிக்கை நிருபராக நானும் நடித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்