5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
ஒரு இயக்குனருக்கு, வெற்றி தான் அடுத்த வாய்ப்பை தீர்மானிக்கும் என்பது போல, தர்பார் படத்தை வெற்றிப் படமாக கொடுக்க தவறியதால், அடுத்து தமிழில் கிடைக்க இருந்த விஜய் படமும் ஏ.ஆர்.முருகதாஸுக்குக்கு கை நழுவி போனது. இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் முருகதாஸ். அல்லு அர்ஜுனுக்கு கதைசொல்லி அவரிடம் சம்மதமும் பெற்றுவிட்டார்.
தற்போது புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், அதை முடித்ததும் வக்கீல் சாப் படத்தை இயக்கிய வேணு ஸ்ரீராம் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் வேணு ஸ்ரீராம் படத்தில் நடிப்பது உண்மைதான் என்றாலும், தற்போது முருகதாஸ் படத்திற்கு தான் அல்லு அர்ஜூன் முன்னுரிமை கொடுக்க விரும்புகிறாராம். அதனால் புஷ்பா படப்பிடிப்பு முடிவடைந்ததும் முருகதாஸ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டு அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். அதற்கான தீவிரமான வேலைகளில் முருகதாஸ் தற்போதே இறங்கி விட்டாராம்.