தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் வருகின்ற 2023 பொங்கலுக்கு வெளியாகும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டது .
'வலிமை' படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 61 வதுபடத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில் தற்போது சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அஜித்தின் 61 வது படமும் பொங்கலுக்கு விஜய் படத்திற்கு போட்டியாக வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் பொங்கல் பண்டிகையில் வெளியான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.