தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

'தெய்வமகள்' சீரியல் மூலம் சின்னத்திரையின் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை வாணி போஜன். திரைப்படங்களுக்காக வாய்ப்பு தேடி அலைந்த காலக்கட்டத்தில் சரிவர வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் ஆப்ஷனை ஓகே செய்து நடித்து வந்தார். அதன்பின் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். தொடர்ந்து 'பகைவனுக்கு அருள்வாய்', 'கேசிநோ', 'பாயுமொளி நீ எனக்கு', 'மிரள்','தாழ் திறவாய்', 'ஊர்க்குருவி' மற்றும் 'காசிமேடு' என பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். இவற்றில் பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
ஆனால், ஒரு காலத்தில் இவர் சினிமாவில் நடிக்க சென்றபோது சில ஹீரோக்கள் இவரை சீரியல் நடிகை என்பதாலேயே ரிஜக்ட் செய்தனர். அப்படி மட்டுமே வாணி போஜன் பல படவாய்ப்புகளை இழந்துவிட்டார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்த வாணி போஜன் இன்று தமிழ் திரையுலகில் அதிகம் தேடப்படும் ஹீரோயினாக, பிசியாக நடித்து வருகிறார். அன்று வாணி போஜனை ரிஜக்ட் செய்த ஹீரோக்கள் இன்று அவரது திறமையையும், புகழையும் பார்த்து தங்களுடன் சேர்ந்து நடிக்குமாறு தூது அனுப்பி வருகின்றனர். ஆனால், வாணி போஜனோ அவர்களுக்கு 'நோ' சொல்லி பதிலடி கொடுத்து வருகிறாராம்.