தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி திரைக்கு வந்துள்ள படம் கோப்ரா. விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ரோஷன் ஆண்ட்ரூஸ், இர்பான் பதான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையடுத்து மூன்று மணி நேரத்துக்கு மேல் இருந்த கோப்ரா படத்தில் 20 நிமிட காட்சியை தற்போது நீக்கி உள்ளனர்.
இந்தப் படத்தில் கணக்கு வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கும் விக்ரமிடம் படத்தின் இரண்டாம் பாதியில் விசாரணை நடத்தப்படும். அந்த கட்சியில் விக்ரமுடன், ஆனந்தராஜ், மியா ஜார்ஜ் ஆகியோரும் நடித்திருப்பார்கள். இந்த காட்சி அப்படியே ஒரு ஆங்கில குறும்படத்தில் இருந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து காப்பி அடித்துள்ளதாக ரசிகர்கள் தற்போது விமர்சனம் செய்து வருகிறார்கள். அதோடு அந்த குறும்பட காட்சியையும் வெளியிட்டிருப்பவர்கள், அஜய் ஞானமுத்து சார், யாரோ ஒரு டைரக்டர் 10 வருடங்களுக்கு முன்னாடியே உங்களுடைய கோப்ரா பட சீனை திருடி இருக்கிறார்கள் என்றும் அவரைக் கிண்டல் செய்து கமெண்ட் கொடுத்து வருகிறார்கள் .